"கோட்டு! ஆய்வு! டீ! ரிப்பீட்டு " - முதல்வரை விமர்சித்த ஜெயக்குமார் !

Update: 2021-11-30 12:15 GMT

"முதலமைச்சர் ஸ்டாலின் கோட் போடுவது, இன்ஸ்பெக்சன் போவது, டீ சாப்பிடுவது என்று சினிமா போல் ரிப்பீட்டேஷன் செய்கிறாரே தவிர இதனால் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த பலனும் இல்லை" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வரின் நடவடிக்ககைகளை விமர்சித்துள்ளார்.


சென்னை ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "முதலமைச்சர் ஸ்டாலின் கோட் போடுவது, இன்ஸ்பெக்சன் போவது, டீ சாப்பிடுவது என்று சினிமா போல் ரிப்பீட்டேஷன் செய்கிறாரே தவிர இதனால் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த பலனும் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க தி.மு.க அரசு தவறி விட்டது. மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த எந்த ஒரு இடத்திலும் ராட்சத இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. மழை காலத்தில் தி.மு.க விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எப்படிச் செய்வது, மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்துவது என தி.மு.க அரசுக்கு தெரியவில்லை" என குற்றம் சாட்டினார்.


Source - Asianet NEWS

Similar News