நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்றால் மத்திய அரசு நிதி கிடைக்காது: எச்.ராஜா தகவல்!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தவில்லை என்றால் மத்திய அரசு அளிக்கும் நிதி கிடைப்பதில் சிக்கலாகும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தவில்லை என்றால் மத்திய அரசு அளிக்கும் நிதி கிடைப்பதில் சிக்கலாகும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அண்ணனல் அம்பேத்கரின் 65வது நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதே போன்று காரைக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு எச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மழை தற்போது மழை பெய்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தால் நகர்பாலிகா சட்டத்தின்படி மத்திய அரசு நிதி தடைபடும். நிவாரணப் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Facebook