கனிமவள கொள்ளையர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்த தி.மு.க அரசு

Update: 2021-12-08 00:30 GMT

சட்டவிரோதமாக கனிமவளத்தை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சப்-கலெக்டர் மற்றும் எஸ்.பி'யை இடமாற்றம் செய்து தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கூடங்குளம் இருக்கன்துறை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன. தி.மு.க பிரமுகர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிமவளம் வெட்டி எடுத்து கடத்தப்படுகிறது என்ற புகார் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தது, மேலும் இரவு பகலும் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த தோட்டாக்களை வெடித்து பாறைகளை தகர்ப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் நிம்மதியாக வாழ வழியின்றி தவிக்கின்றனர்.


இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் வெடிவைத்த அதிர்வினால் வீடு இடிந்து விழுந்து ஒரு குழந்தை பலியான சம்பவம் வேறு அந்த பகுதி மக்களை உலுக்கியது. போதாக்குறைக்கு அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.


இதன் காரணமாக மக்களின் புகாரின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனை நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பரது பெயரில் இயங்கும் ஒரு கல்குவாரியில் நடத்திய சோதனையில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 824 கனமீட்டர் கனிமவளம் நடைச்சீட்டின்றி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நிறுவனத்திற்கு 20 கோடியே 11 லட்சத்து 64 ஆயிரத்து 352 ரூபாய் அபராதம் விதித்தார்.


இதன் காரணமாக ஆத்திரமடைந்த கனிமவள கொள்ளையர்கள் நேர்மையாக நடவடிக்கை எடுத்த இரு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யும் அளவிற்கு தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அண்மையில் சப்-கலெக்டரை இடமாற்றம் செய்தனர். லாரிகளை பறிமுதல் செய்ததால் எஸ்.பி. மணிவண்ணனும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


நேர்மையாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் தி.மு.க அரசால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.


Source - Dinamalar

Tags:    

Similar News