மீனவப் பெண்மணியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது! - ஜெயக்குமார் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் ஒரு மீனவப் பெண்மணி கவிச்சி நாத்தமாக இருப்பதாக கூறி நடத்துனர் ஒருவர் இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-08 06:32 GMT

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் ஒரு மீனவப் பெண்மணி கவிச்சி நாத்தமாக இருப்பதாக கூறி நடத்துனர் ஒருவர் இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையின் வாயிலாக கூறியிருப்பதாவது: மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதத்தை இயற்கை நமக்கு மீன்களாகப் படைத்து வழங்கியுள்ளது. மக்கள் மீன்களைத் தமது உணவாகப் பயன்படுத்துவதற்காக மீனவர் சமுதாயத்தின் கடலோடிகள் மற்றும் மீனவர் சமுதாயத்தின் தாய்மார்கள் நாள்தோறும் மிகவும் கடுமையான உழைப்பைப் பங்களித்து வருகின்றனர். 


காலம், காலமாகக் மீனவர் சமுதாயத்தின் தாய்மார்கள் மீன்களைச் சந்தைப் படுத்துவதற்காகக் காலை நேரத்தில் அலுமனிய டேக்சா கூடையில் மீன்களோடு ரயிலும், பஸ்ஸிலும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிளிலும் பயணித்து வருகின்றனர். இன்றைய தினம் (நேற்று) கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பேருந்திலிருந்து ஒரு மீனவப் பெண்மணி கவிச்சி நாத்தமாக உள்ளது என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் காரணமாக காட்டி இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஒட்டு மொத்த மீனவர் சமுதாயத்தினரின் உழைப்பை அவமதித்தது போலாகும். அரசு போக்குவரத்து பேருந்து ஊழியர்களின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

காலையில் மீன் கூடையை பேருந்தில் ஏற்றா விட்டால் மதியம் சாப்பாட்டின் போது மணக்கும் மீன் குழம்பு எப்படி கிடைக்கும். அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதவாறு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News