தி.மு.க.வுக்கு எதிராக நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு! - அ.தி.மு.க. அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை என்று அதிமுக நாளை (டிசம்பர் 9) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்த நிலையில் திடீரென்று ஆர்ப்பாட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2021-12-08 12:33 GMT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை என்று அதிமுக நாளை (டிசம்பர் 9) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்த நிலையில் திடீரென்று ஆர்ப்பாட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 11.12.2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News