அமித்ஷா பேச்சுவார்தைக்கு பின் டெல்லி போராட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்த விவசாயிகள்

Update: 2021-12-09 11:45 GMT

உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதால் டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.



மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல கட்ட நடவடிக்கைகள் எடுத்தும் போராட்டத்தை கைவிடவில்லை, இதனையடுத்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 29'ம் தேதி பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

என்றாலும் போராட்டதை கைவிடபோவதில்லை என சில அமைப்புகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். அதனைதொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை (டிசம்பர் 11-ந்தேதி) டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்கள்.


Source - Maalai malar

Similar News