முதலில் மீனவப்பெண்மணி, அடுத்து நரிக்குறவர் குடும்பத்தை இறக்கிவிட்ட அரசு பேருந்து!- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி மீன் வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார். அப்போது நடத்துனர் மீன் கவுச்சி அடிக்கிறது என்று அப்பெண்மணியை கீழே இறக்கிவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பெண்மணி பேருந்து நிலையத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார் என்பது அனைவரும் அறிவோம்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி மீன் வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார். அப்போது நடத்துனர் மீன் கவுச்சி அடிக்கிறது என்று அப்பெண்மணியை கீழே இறக்கிவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பெண்மணி பேருந்து நிலையத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார் என்பது அனைவரும் அறிவோம்.
தற்போது அந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் குடும்பத்தினரை பேருந்தில் இருந்து பாதி வழியிலேயே நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி உடமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மீனவப்பெண்மணி ஒருவர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சிலதினங்களில், தற்போது நரிக்குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து இறக்கிவிட்டு, அவர்களது உடைமைகளை வீசி எறிந்ததாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு அஇஅதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/muXkBc3Jd0
— O Panneerselvam (@OfficeOfOPS) December 9, 2021
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை கோயில் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தடுத்த நிகழ்வு, இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி மீன் வியாபாரம் செய்துவிட்டு இரவில் மகளிருக்கான அரசுப் பேருந்தில் ஏறும்போது, அந்தப் பேருந்தின் நடத்துனர் மீன் நாற்றம் அடிப்பதாகத் தெரிவித்து அந்த பெண்மணியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நிகழ்வு வரிசையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து பாதி வழியில் நடத்துனர் இறக்கிவிட்டதோடு, அவர்களது உடமைகளை வீசி எறிந்ததாகவும் வீடியோ காட்சிகளுடன் செய்திகள் வந்துள்ளன. இது போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நடக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter