ஏவல்துறையா அல்லது காவல்துறையா ? - தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை கைது செய்து வருகின்றனர். அதே போன்று திமுக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் மதுரையை சேர்ந்த அரசியல் விமர்சகரும், யூடியூபருமான மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-11 07:02 GMT

 திமுக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் மதுரையை சேர்ந்த அரசியல் விமர்சகரும், யூடியூபருமான மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்ற துரதிஷ்டமான சம்பவத்தில் நமது முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் அனைத்து இடங்களிலும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

FB

இதனிடையே தமிழக ஆளுநர் ஏன் பிபின் ராவத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் காமராஜர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிபின் ராவத் படத்தை வைத்து மரியாதை செலுத்தினார். எனவே இதனை திமுகவினர் தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும்.

மேலும், தமிழக காவல்துறையை செயல்பட வைப்பது அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் மட்டுமே. என தமிழகத்தில் நேர்மையான டிஜிபி என்றால் பிபின் ராவத் மறைவில் தவறான கருத்தை பதிவிடும் அனைவரையும் கைது செய்ய வேண்டும். திமுகவின் ஐடிவிங்கில் உள்ள சின்ன சின்ன பசங்களை வைத்து புகார் கொடுத்து, பாஜக மற்றும் பிற தேசிய வாதிகளை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும்.

மேலும், திமுக இது போன்று செயல்பட்டால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். கருத்துரிமையை மீறி திமுகவினர் செயல்படுகினறனர். அவர்களை விட்டு தேவையின்றி பாஜகவினரை கைது செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்று தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News