பரபரப்பை எகிற வைக்கும் சந்திப்பு : ஆளுநரிடம் பா.ஜ.க. புகார்!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின்னர் பாஜகவினர் மற்றும் தேசியவாதிகளின் குரல் வளையை நசுக்கி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2021-12-12 11:16 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (டிசம்பர் 11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேசிய வாதிகளின் குரல்களும், பாஜக சமூக வலைதள தொண்டர்களையும் திமுக அரசு அச்சுறுத்தி வருகிறது. இது போன்ற நிலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசின் அராஜக போக்கு குறித்து மனுவாக அளித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய திரு.ஆர்.என்.ரவி அவர்களை பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் அறிவாலயம் (திமுக) அரசுனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News