கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கப்போகிறதா?

Update: 2021-12-13 09:45 GMT

தமிழகத்தில் கொரோனோ பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இருப்பினும் தொற்றின் பாதிப்பை கருத்தில் கொண்டு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக தொடங்கியுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் கொரோனோ'வின் புதிய வகை வைரஸான ஒமிக்கிரான் தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளை மறுநாளுடன் 15ம் தேதி முடிவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இன்னும் சில நாட்களில் கிருஸ்துமஸ், ஆங்கில புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களுக்கு கொரோனோ பரவல் காரணமாக தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை இன்று மாலைக்குக் தெரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Asianet NEWS

Similar News