திராவிடர் கழகத்தின் மீது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழக கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக' தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை, எனவே இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.