தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவை, கொரோனா தடுப்பூசி முகாம் என ஸ்டாலினை ஏமாற்றிவிடுவோம்: அன்பில் மகேஷின் பதில்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-03 12:43 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தற்போது ஒமைக்ரான வைரஸாக உருமாறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கொரோனா பரவலை உதாஷனப்படுத்தி விட்டு கூட்டங்களை கூட்டி வருகின்றனர். அது போன்று ஒரு சம்பவம் தற்போது மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது. அதாவது மயிலாடுதுறையில் ஒரு தனியார் மண்டபத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்துள்ளார். அது மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை கூட்டி அதகளம் செய்து விட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த சம்பவம் குறித்து சென்றால், கொரோனா தடுப்பூசி முகாம் என சமாளித்துவிடுவேன் என்று அன்பில் மகேஷ் பேசியுள்ளார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி பொய் சொன்னால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் எப்படி அரசு சட்டங்களை மதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Junior Vikatan

Image Courtesy: Times Of India

Tags:    

Similar News