சிக்கன், மாமூல் கொடுக்காததால் சூப் கடையை பிரித்து மேய்ந்த தி.மு.க.வினர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டி அட்டூழியம்!

சென்னை, தாம்பரத்தில் ஓசியில் சிக்கன், சூப் மற்றும் மாமூல் கேட்டு கொடுக்காததால் திமுகவை சேர்ந்தவர்கள் கடையை நடத்த விடாமல் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-04 06:19 GMT

சென்னை, தாம்பரத்தில் ஓசியில் சிக்கன், சூப் மற்றும் மாமூல் கேட்டு கொடுக்காததால் திமுகவை சேர்ந்தவர்கள் கடையை நடத்த விடாமல் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் அவரது மனைவி நிஷா வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர்கள் மாடம்பாக்கம் பகுதியில் சூப் கடை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே திமுகவை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜா தினமும் சூப் கடைக்கு சென்று ஓசியில் சிக்கன், சூப் சாப்பிட்டு வந்துள்ளனர். இதன் பின்னர் நிஷாவிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பணம் எதுவும் தரமுடியாது என்று நிஷா கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா மற்றும் செல்வம் ஆகியோர்கள் சூப் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இனிமேல் கடை எப்படி நடத்துவ என்று நிஷாவை மிரட்டியுள்ளனர். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன நிஷா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த நிஷா, நான் தற்கொலை செய்ய தூண்டியதே செல்வம் மற்றும் ராஜாதான். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் சுதந்திரமாக நடமாடலாம், அனைத்துமே கிடைக்கும் என்றெல்லாம் பேசிய திமுகவினரே பெண் நடத்தும் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இது போன்று அடாவடித்தனம் செய்யும் திமுகவினரால் தனியாக சுயத் தொழில் செய்யும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News J

Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News