சக்கரைப் பொங்கலுக்கு கோதுமை மாவு - தி.மு.க.வின் 'பொங்கல்' பை அட்ராசிட்டிகள்!
தமிழக மக்களுக்கு திமுக அரசு பொங்கல் பரிசாக, புளி, ரவை, ஒரு கிலோ பச்சரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு திமுக அரசு பொங்கல் பரிசாக, புளி, ரவை, ஒரு கிலோ பச்சரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பொங்கலுக்கு அதிமுக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் முழு கரும்பு, பச்சரிசி, வெள்ளம், முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தாராளமா வழங்கியது. இதனால் ஏழை மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிலையில், தற்போது திமுக அரசு அமைந்த பின்னர் இந்த பொங்கலுக்கு இலவசமாக சில பொருட்களை அறிவித்துள்ளது. அதாவது, ஒரு கிலோ பச்சரிசி, 500 கிராம் பாசிபருப்பு, 100 கிராம் மிளகாய்த்தூள், 100 மல்லித்தூள், ஒரு கிலோ கோதுமை மாவு, வெல்லம் ஒரு கிலோ, ஏலக்காய் 10 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், ரவை ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், நெய் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், உப்பு அரை கிலோ, திராட்சை 50 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், ஒரு துணிப்பையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனை வைத்துக்கொண்டு ஏழைகள் எப்படி பொங்கல் கொண்டாட முடியும். பொங்கல் பண்டிகைக்கு தேவை கரும்பு, பச்சரிசி, பூசணிக்காய், புது பானை உள்ளிட்டவைகள் தான் தேவை. இதற்கு குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தேவைப்படும். கடந்த காலங்களில் அதிமுக அரசு வழங்கி 2500 ரூபாயில் இந்த பொருட்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் வாங்கி தங்களின் வீடுகளில் பொங்கல் வைத்து சிறப்புடன் கொண்டாடினர். ஆனால் தற்போது திமுக அரசு வழங்கி உப்பு, புளி, மிளகாய்த்தூள் எதற்காக என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.