கார்த்தி சிதம்பரம் அரசியல் பண்ண வழியின்றி பேசிக்கொண்டிருக்கிறார் - அண்ணாமலை சரவெடி!
"கார்த்தி சிதம்பரம் அரசியல் பண்ண வழியில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என விளம்பர நோக்கத்துடன் பேசும் கார்த்தி சிதம்பரத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "ராஜேந்திர பாலாஜி அவர்கள் எங்களின் தோழமை கட்சியில் இருக்க கூடிய முக்கியமான தலைவர் அவரை போய் பாரதிய ஜனதா கட்சி கூட்டிட்டு போய் ஒளிச்சு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது, இதை குறை சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் அரசியல் பண்ண வழியில்லாமல் இதனை பேசிக்கொண்டிருக்கிறார்" என்றார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றமற்றவர் என நிரூபித்து வருவார் எனவும் தெரிவித்தார். பின்னர் வேலுநாச்சியாரை நினைவு கூறும் வகையில் அவரது பெயரில் தொடர் வண்டி விட்டது பா.ஜ.க அரசுதான்" என்றார்.