பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கோபம்!

பாரத பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது. திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2022-01-06 02:52 GMT

பாரத பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது. திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி வழங்க இருந்தார். அதற்காக விமானத்தில் பஞ்சாப் மாநிலம், பதிண்டா வரை பயணம் செய்தார். அங்கிருந்து ஹுசைனிவாலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கு அமைந்திருக்கும் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அப்போது கடுமையான மழையால் வானிலை மோசமாக இருந்தது. இதனால் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு காரில் பயணம் மேற்கொண்டார். 


அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விவசாய என்ற போர்வையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பிரதமர் மோடி சென்ற கான்வாய் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தில் 20 நிமிடங்களாக காத்திருந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் பயணத்தை ரத்து செய்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய இணையமைச்சரும், தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பாரத பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது. பஞ்சாபில் திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News