"பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க கொள்ளையடித்ததுதான் மிச்சம்" - போட்டுத்தாக்கும் எடப்பாடி பழனிசாமி

Update: 2022-01-11 11:15 GMT

"பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க கொள்ளையடித்ததுதான் மிச்சம்" என தி.மு.க'வின் ஊழல் பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.



சேலத்தில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடந்தது அதில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டிய பொங்கல் தொகுப்பு பைகள் மற்றும் பொருள்கள் மிக மேசமானதாக இருக்கிறது. 2 1/2 டன் பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய வெல்லம் உருகி மோசமானதாக மாறிவிட்டது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதனை ரத்து ஆய்வு செய்து ரத்து செய்திருக்கிறார்கள். மேலும் பல இடங்களில் தரமற்ற வெல்லத்தை கொடுத்துள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் எடை வேறு குறைவாக உள்ளது.


நெகிழி பை கூடாது என நாங்கள் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதையே தி.மு.க மீண்டும் கொண்டு வந்து விளம்பரம் செய்கிறார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தி.மு.க கூறியது, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பரிசு பொருள்கள் வழங்கப்பட்ட பைகளில் ஹிந்தியில் இருக்கிறது எனவே தி.மு.க சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு.



ரூ.33'க்கு கரும்பு விலை நிர்ணயிக்கப்பட்டு த மற்ற கரும்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதிலும் ஒரு கரும்புக்கு 15 ரூபாய் இந்த அரசாங்கம் ஊழல் செய்திருக்கிறது. இதில் மட்டும் 30 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. ஆகவே பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க இப்படி கொள்ளையடித்ததுதான் மிச்சம்" என எடப்பாடி கூறியுள்ளார்.


Source - Maalai malar

Similar News