சேலத்தில் ஐயாயிரம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி

Update: 2022-01-11 12:15 GMT

சேலத்தில் ஒட்டுனருக்கு வழித்தடம் மாற்றி கொடுப்பதற்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.



சேலம் மாவட்டம் தாராமங்கலம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் ஓட்டுனராக பணிபுரிபவர் பரமசிவம் என்பவர். இவர் பணி நிமித்தமாக வெளியூர் பயண வழித்தடத்தில் இருந்து உள்ளூர் வழித்தடத்திற்கு மாற்றம் கேட்டுள்ளார். இதனை அறிந்த தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன் என்பவர் பரமசிவத்தை அணுகி பத்தாயிரத்தை கொடுத்தால் நான் வழித்தடத்தை மாற்றி தருகிறேன் என வலியவந்து கூறியுள்ளார்.


தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன் பேச்சை நம்பாத பரமசிவம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி பரமசிவம் தாராமங்கலம் பேருந்து நிலையத்தில் வைத்து பணத்தை கொடுத்தார். அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி குணசேகரனை கையும் களவுமாக பிடித்தனர்.


Source - Polimer NEWS

Similar News