காமராஜர் செயலுக்கு கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டி சட்டபேரவையில் வசமாக சிக்கிய துரைமுருகன்
எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டி பழக்கப்பட்ட தி.மு.க வழக்கம்போல் காமராஜர் செய்ததையும் கருணாநிதி செய்தது போல் ஸ்டிக்கர் ஒட்ட பார்த்ததை காங்கிரஸ் கட்சியினர் கண்டித்துள்ளனர்.
தற்பொழுதைய தி.மு.க அரசின் ட்ரெண்ட் என்னவென்றால் நல்ல விஷயங்கள் மீது உடனே பாய்ந்து ஸ்டிக்கர் ஒட்டி அதனை தி.மு.க சாதனையாக மாற்ற முயற்சிப்பது, மழை வெள்ளம் போன்ற கெடுதலான விஷயங்கள் என்றால் அது கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியின் அவலம் எனவும் மடைமாற்றி தாங்கள் நல்லவர்கள் போல் காட்டிக்கொள்வதாகும். அந்தவகையில் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினர் துரைமுருகன் மறைந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான காமராஜர் செய்ய செயலுக்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கும் போது வசமாக காங்கிரஸ் கட்சியினரிடம் சிக்கி கொண்டார்.
சட்டபேரவையில் பேசிய துரைமுருகம் மறைந்த முதலமைச்சர்கள் பக்தவச்சலம், காமராஜர் ஆட்சிகாலத்தில் அவர்கள் வரும் காரில் சைரன் ஒலிப்பார்கள் அதனை கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு 'இதை எதுக்குய்யா ஊதுறீங்க, கடைசி காலத்துல ஊதுவாங்க' என நிறுத்ந சொன்னதாக கூறினார் துரைமுருகன்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, "துரைமுருகன் வயதில் மூத்தவர், அனுபவமிக்கவர் அவர் காமராஜர் பற்றி கூறுகையில் வருத்தம் அளிக்கிறது. காமராஜர் போன்ற எளிமையானவரை உலகம் பார்த்ததில்லை, காமராஜர் பற்றி பேசும் போது சிந்தித்து பேச வேண்டும். காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் வாகனத்தில் சைரன் ஒலிக்கையில், "நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன், எனக்கு எதற்கு சைரன்?" என கேட்டு , சைரன் வேண்டாம்" என நிறுத்தியவர் காமராஜர், ஆனால் காமராஜர், பக்தவச்சலம் இருந்த காலத்தில் உள்ள சைரனை நிறுத்தியவர் கருணாநிதி என துரைமுருகன் தவறாக கூறுகிறார், துரைமுருகன் பேசியதை திரும்ப பெற வேண்டும்" என கூறினார் செல்வபெருந்தகை.
தி.மு.க'வின் ஸ்டிக்கர் கலாசாரம் இந்த அளவிற்கு போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.