மிளகு'ல இலவம்பஞ்சு கொட்டை, மிளகாய்தூள்'ல மரத்தூள் - தி.மு.க அரசின் கலப்பட பரிசுபொருள்கள்

Update: 2022-01-18 11:30 GMT

தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பொருள்களில் மிளகு பாக்கெட்'டில் இலவம் பஞ்சு கொட்டையும், மிளகாய்தூள் பாக்கெட்டில் மரத்தூளும் கலந்து கொடுத்ததால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட பொருள்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "அரசாங்கம் பொங்கலுக்கு கொடுக்கின்ற பொருள்களில் எல்லாமே கலப்படம இருக்கு, அந்த 21 பொருள்கள்ல எதுவுமே தரமாக இல்லை. பரிசு தொகுப்புல இருக்குற மிளகு பாக்கெட்டில் மிளகே இல்லை அது வெறும் இலவம்பஞ்சு கொட்டையும், அவரைக் கொட்டையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு பாக்கெட்'ன்னு கொடுத்திருக்காங்க. அதேமாதிரி மிளகாய்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் வெறும் மரத்தூள் எதையோ கலந்து கொடுத்துருங்க" என புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், "மொத்தம் 21 பாக்கெட்டுகள் தருகிறோம்'ன்னு சொல்லிட்டு நிறைய பேருக்கு தர்றதே இல்லை. பல பேருக்கு உப்பு பாக்கெட் கிடைக்கவே இல்லை! பேருக்கு பொங்கல் பரிசு'ன்னு அரசு எதையோ கொடுத்து ஏமாற்றுகிறது" என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.


கடந்த வாரம் வெல்லம் உருகிய நிலையிலும், வெல்லதில் மருத்துவ ஊசி போன்ற பொருள்கள் இருந்ததையும் மக்கள் புகார் தெரிவித்த நிலையில் தற்பொழுது இதுபோன்ற புகார் எழுந்திருப்பது தி.மு.க அரசின் கையாலாகாத நிலையை காட்டுவதாக மக்கள் உணர்ந்துள்ளனர்.



Source - junior vikatan

Similar News