"என்ன பிச்சையா போடுறீங்க?" - தி.மு.க அரசின் தரமற்ற பரிசு பொருளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

Update: 2022-01-18 11:30 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமற்ற பரிசுப்பொருட்கள் வழங்கியதையும், வாங்காதவர்களுக்கும் பொருள்கள் வழங்கியதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்ததாலும் பொதுமக்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு எனும் ஊரில் நியாய விலைக்கடையில் தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. அதில் இருந்த பொருள்களில் வண்டுகள் மொய்க்கும் அரசி, உருகிய வெல்லம் என மிகவும் மோசமான நிலையில் பொருள்கள் வழங்கப்பட்டதை பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுமட்டுமல்லாது பொருள்கள் வாங்கியவர்களுக்கு வரும் குறுந்செய்தி போல் பொருள்கள் வாங்காதவர்களுக்கும் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக நியாய விலைக்கடை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் பொருப்பற்ற முறையில் பதில் கூறியதால் பொதுமக்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தரமான பொருள்கள் வழங்குவதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Source - Junior Vikatan

Similar News