உ.பி'யில் யோகிதான் அடுத்த முதல்வர் எத்தனை தொகுதிகள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி? - கோலாகல சீனிவாசன்

Update: 2022-01-20 12:45 GMT

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக வெற்றி பெருவார் என்பது உறுதி ஆனால் எத்தனை தொகுதி கூடுதல் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி என மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார்.


இந்தியாவில் அடுத்தபடியாக ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. அதில் இந்தியாவின் மிகப்பெரிய அளவில் 403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்திரபிரதேச தேர்தல் முடிவுகளை இந்தியாவே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலைகளை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன் கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "உத்திரபிரதேசம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். 80 லோக்சபா தொகுதிகள், 403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஒரு மாநிலம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமாக உள்ள மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10'ம் தேதி முதல் 7'ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ள தேர்தலை பொறுத்த வரையில் முதல் கருத்து கணிப்பு ஏ.பி.சி ஓட்டர்ஸ் வெளியிட்டது அதில் யோகி 280 முதல் 290 தொகுதிகள் வரை பெறுவார் என கணிக்கப்பட்டது. பின்னர் டைம்ஸ் நவ் 250 தொகுதிகள் வரை பா.ஜ.க வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இதில் 202 தொகுதிகளை கைப்பற்றினால்தான் ஆட்சியை பிடிக்க முடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 312 சீட் ஆகும்.

மேற்கூறிய கருத்துக்கணிப்புகளில் ஒன்றில் கூட அகிலேஷ் யாதவ் வெற்றி பெறுவார் என குறிப்பிடவில்லை. அனைத்து கருத்துகணிப்புகளும் யோகி வெற்றி பெறுவார் என்றே கூறுகின்றன. ஆக இதிலிருந்து யோகி வெற்றி நிச்சயமானதாக இருக்கும் ஆனால் எத்தனை தொகுதி என்பதே மில்லியன் டாலர் கேள்வி" என கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Source - Asianet NEWS

Similar News