தருமபுரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் அனந்த கிருஷ்ணன் உடலுக்கு ஜி.கே.மணிஅஞ்சலி!

Update: 2022-01-21 10:15 GMT
தருமபுரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் அனந்த கிருஷ்ணன் உடலுக்கு ஜி.கே.மணிஅஞ்சலி!

தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் எல்.அனந்த கிருஷ்ணன் நேற்று மாலை (ஜனவரி 20) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் பிடமனேரியில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


இந்நிலையில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மற்றும் தருமபுரி பாமக எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் பாமக நிர்வாகிகள் சென்று அனந்த கிருஷ்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார் ஜி.கே.மணி.

Tags:    

Similar News