மதமாற்றத்தால் மாணவி தற்கொலை: நீதி கேட்டு சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்!

கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு தமிழக பாஜகவினர் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

Update: 2022-01-22 15:05 GMT

கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு தமிழக பாஜகவினர் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் 47, இவருக்கு 17வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை உள்ளார். அவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்க வைத்திருந்தார். மேலும், மாணவி மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியே படிக்கும் சூழ்நிலை இருந்தது.

இதனிடையே விடுதியில் மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால் முருகானந்தம் தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். இதன் பின்னர் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளார். அப்போது தன்னை பள்ளி விடுதியில் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி நான் பூச்சி மருத்து குடித்தேன் என்று மருத்துவர்களிடம் மாணவி கூறியுள்ளார்.

இதன் பின்னர் மாணவி கடந்த 19ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்றமே காரணம் என்று அவரது தந்தை முருகானந்தம் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே போன்று இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டியும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பாஜக சார்பில் குஷ்பு தலைமையில் ஆர்பாபட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News