தி.மு.க அரசு கோவில்களை இடிக்கிறது என கூறியதால் பா.ஜ.க இளைஞரணி தலைவர் மீது வழக்கு பாய்ந்தது
பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் மீது தி.மு.க அரசு வழக்கு பதிந்து உள்ளது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு படத்திற்காக தி.மு.க அரசை விமர்சிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தி வினோஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதிவிட்ட படத்தில் தி.மு.க அரசு இந்து மத கோவில்களை இடிக்கிறது என்பது போல் பதிவிட்டிருந்தார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவு இடுவோர் கருத்துக்களை பகிர்ந்து தொடர்ந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.