தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

Update: 2022-02-01 12:45 GMT

தஞ்சை பள்ளி மாணவி மதமாற்றத்திற்கு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டுமென்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி லாவண்யா மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வீடியோவில் மரண வாக்குமூலம் அளித்து விட்டு இறந்தார். இந்த விவகாரத்தை தமிழக பா.ஜ.க கையில் எடுத்து இறந்த சிறுமிக்காக நீதிவேண்டி வீதியில் இறங்கி போராடியது. போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ'க்கு மாற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் முன்பு மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என ஏ.பி.வி.பி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தற்போது வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மேலும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த கோரியும் இந்த மனுவில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா குறிப்பிட்டுள்ளார்.


Source - Junior Vikatan

Similar News