"ராகுல் மாதிரி தலைவர் வச்சிருக்க உங்களை பார்த்தா எனக்கு பாவமா தான் இருக்கு" காங்கிரஸ் கட்சிக்கு நிர்மலா பதிலடி

Update: 2022-02-02 12:00 GMT

ராகுலை தலைவராக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பரிதாபப் படுவதாக நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இன் நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு மேலோட்டமான பதில் என நிதி மந்திரி சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், "பழமையான அரசியல் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.


மேலும் எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துக்களை மட்டும் கூறும் ஒரு தலைவரை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பரிதாபப்படுகிறேன்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Source - Maalai malar

Similar News