தி.மு.க'வில் இருந்து தாவி பா.ஜ.க'வில் போட்டியிட பலர் தயார் - டாக்டர் சரவணன் சர்ப்ரைஸ்

Update: 2022-02-02 12:00 GMT

தி.மு.க'வில் இருந்து பா.ஜ.க'விற்கு ஒரு பட்டாளமே வரவிருக்கிறது என பா.ஜ.க நிர்வாகி டாக்டர் சரவணன் மதுரையில் கூறியுள்ளார்.


தி.மு.க'வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் தற்போது பா.ஜ.க'வில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் மதுரையல் உள்ள மாநகர பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மதுரையில் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளருக்கு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மதுரையில் இருந்து தலைமையிடம் கேட்டுள்ளோம்.


நிச்சயமாக சிறுபான்மை முஸ்லிம் பெண்ணை மதுரையின் மேயராக நிறுத்தப்படுவார், எங்கள் வியூகத்தை நாங்கள் தற்போது கூற முடியாது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பிறகு நீங்கள் எங்கள் வியூகத்தை கேட்பீர்கள். தி.மு.க'வில் இருந்தும் எங்கள் கட்சியில் இணைந்து போட்டியிட உள்ளனர் ரோட்டரி கிளப் சமுதாய அமைப்புகளில் இருந்தும் எங்களுடன் இணைந்து போட்டியிட உள்ளனர். இளைஞர் பட்டாளம் பா.ஜ.க'விற்கு அதிகமாக உள்ளது" என கூறினார் டாக்டர் சரவணன்.



Source - One India tamil

Similar News