"தஞ்சை சிறுமி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனம் காக்கிறார்" - விஜயசாந்தி கேள்வி

Update: 2022-02-02 12:00 GMT

"தஞ்சையில் மதமாற்றம் கொடுமையால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார்? யாரைக் காப்பாற்ற முயல்கிறார்? என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என பா.ஜ.க'வின் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள விஜயசாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி 'என்னை மதமாற்றம் செய்ய முயல்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள்' என மரண வாக்குமூலம் வீடியோவில் அளித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க வீதியில் இறங்கி போராடுயது இதன் விளைவாக பா.ஜ.க தலைமை நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.


பா.ஜ.க'வின் விசாரணை குழுவில் தலைவி சந்தியா ராய், தெலுங்கானா முன்னாள் எம்.பி விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த கீதா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான விஜயசாந்தி பேசும்பொழுது கூறியதாவது, "மதம் மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியதன் காரணமாக மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டார் இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருப்பதற்கு என்ன? காரணம் யாரை காப்பாற்ற முயல்கிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை, சாகும் தருவாயில் எந்த குழந்தையும் பொய் சொல்லாது! ஏன் அந்த குழந்தையின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.



Source - Junior Vikatan

Similar News