மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, தீபாவளி பண்டிகைக்கு இலவச சிலிண்டர் - தெறிக்கவிடும் யோகி ஆதித்யநாத்!

Update: 2022-02-09 13:45 GMT

"லவ் ஜிகாத் குற்றத்திற்கு தண்டனை, ஹோலிப் பண்டிகைக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" என உத்தர பிரதேச தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் தேசிய அளவல் கவனம் ஈர்த்து வருகிறார்.


உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேற்று பா.ஜ.க'வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.


அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குறைந்த பட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகை மற்றும் ஹோலி பண்டிகைக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொதுப்போக்குவரத்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்கள், விதவைகளுக்கான ஓய்வூதியம் 1500 ஆக உயர்த்தப்படும் போன்ற பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.


இதுதவிர உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, மற்றும் 10 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் உத்தரபிரதேச பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் அடங்கியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பின்பு அமித்ஷா கூறியதாவது முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை மயக்கி அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள் இதை தடுக்க லவ்ஜிகாத் குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த நவம்பரில் யோகி ஆதித்யநாத் அரசு இயற்றிய அவசர சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார்.



Source - Junior Vikatan

Similar News