மேகாலயாவில் அனைத்து எம்.எல்.ஏ'க்களும் விலகல் - ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அவல நிலையில் காங்கிரஸ்
மேகாலயாவில் தற்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 2017'ம் ஆண்டு நடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றது ஆனால் இப்பொழுது வெறும் இரண்டு எம்.எல்.ஏ'வை வைத்து தேர்தலை சந்திக்கிறது இதுபோன்ற ஒரு நிலை தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மேகாலயாவில் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ'க்கள் இருந்தனர் ஆனால் அவர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸில் சேர்ந்து விட்டனர் இதனால் காங்கிரஸின் பலம் குறைந்தது.
ஷில்லாங் மக்களவை உறுப்பினர் வின்சென்ட் என்பவரை காங்கிரஸ் தலைமை கடந்த செப்டம்பர் மாதம் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முகுல் சங்மா தனது ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது நடந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது எஞ்சி இருக்கும் ஐந்து எம்.எல்.ஏ'க்களும் ஆளும் மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் சேருவதாக அறிவித்து விட்டனர்.
அந்த ஐந்து எம்.எல்.ஏ'க்களும் மேகாலயவில் உள்ள அரசுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி அம்பரீன் லிங்டோ தலைமையில் 5 எம்.எல்.ஏ'க்களின் கையெழுத்துப் போட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளனர் இதனால் ஒரு எம்.எல்.ஏ கூட மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.