நமது ஊரில் உள்ள முருகன் கோவிலின் மூலம் நாம் அடைய வேண்டிய நன்மைகள்/ வசதிகள் யாவும் கிடைக்கவில்லை. கோவிலின் மூலம் சுற்றுலா மேம்பாடு, மருத்துவ வசதி மேம்பாடு, கல்வி தரம் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான உதவிகள், புராதன வசதிகள் மீட்டெடுப்பு முதலியவைகள் எதுவும் நடக்கவில்லை.
தீர்வு: மத்திய அரசின் திட்டத்தில் நமது ஊரை ஆன்மீக ஸ்தலமாக இணைத்தல்.
நமது ஊரில் மிக பெரிய முருகன் கோயில் (ஆன்மீக தளம்) உள்ளது. இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் ஏராளம், உதாரணத்திற்கு நம் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், ஊரிலிருந்து கோவிலுக்கு செல்ல மின்சார வாகனங்கள் இயக்க வழி வகை செய்யப்படும். ஊரில் பெருவாரியான இடங்களில் சூரிய ஒளி மின் விளக்குகள் பொருத்தப்படும், மாணவ, மாணவிகளுக்கு தனிப்பட்ட திறன் மேம்பாட்டு மையம் அமைத்தல், பெருவாரியான இடங்களில் கேமரா நிறுவுதல் என அனைத்து வசதிகளும் செய்து தர முயற்சி எடுக்கப்படும். இவை அனைத்தும் பிரதான் மந்திரி இன் ஆன்மீக தளங்களை மேம்படுத்துதல் திட்டத்தின் மூலம் செய்ய இயலும், தற்போது தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வேதாரன்யம் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
எப்போது?
உங்கள் ஒத்துழைப்புடன் ஒன்றரை வருடத்திற்குள் (2023)
பிரச்சனை:
நல்ல தண்ணீர் விநியோகம்:
நமது பகுதிகளில் சரியான இடைவெளியில் நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. சில நேரங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கின்றன. பல நேரங்களில் சமையல் வேலை கூட செய்ய தண்ணீர் இருப்பதில்லை என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது.
தீர்வு:
அனைத்து வீடுகளுக்கும் தினமும் நல்ல தண்ணீர் விநியோகம் செய்வது எப்படி?
பிரதான் மந்திரி இன் ஜல் ஜீவன் மிஷன் (நகர்புறம்) வீடு தேடி தண்ணீர் வரும் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடி தண்ணீர் வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்திற்கான நிதி பங்களிப்பு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
எப்போது?
உங்கள் ஒத்துழைப்புடன் ஒரு வருட காலத்திற்குள் (2023)
பிரச்சனை:
தெருக்களில் குப்பை சேர்த்து இருப்பது
நமது தெருக்களில் குப்பை சரியாக அகற்றப்படுவதில்லை. ஆங்காங்கே குப்பைகள் சேர்த்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புறம் மாசுபட்டு நோய்கள் பரவுகின்றது.
தீர்வு:
தினசரி தெருக்களில் இருக்கும் குப்பைகளை சுத்தமாக அகற்றுவது எப்படி?
பிரதான் மந்திரியின் ஸ்வச்ச பாரத் அபயான் & தூய்மை இந்தியா திட்டம் மூலம் நமது தெருக்களுக்கு தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும். குப்பை சேகரிக்க வரும் நேரம், வருபவர்களின் பெயர், தொடர்பு எண் ஆகியவை தெருக்களில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படும். இதற்கான நிதி மத்திய / மாநில (50/50) அரசிடம் இருந்து பெற்றுத்தரப்படும்.
எப்போது?
உங்கள் ஒத்துழைப்புடன் ஒரு வருட காலத்திற்குள் (2022 டிசம்பர்)
பிரச்சனை:
குடியிருப்பு பகுதிகளில் பொது போக்குவரத்து (அதி வேகமாக) இயங்குவது
நமது ரத வீதிகளில் பஸ் மற்றும் லாரிகள் வீட்டிற்கு மிக மிக அருகாமையில் செல்வதனால் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பொது போக்குவரத்தினால் ஏற்படும் மாசு மிகவும் அதிகமாக இருப்பதால் பல நோய்கள் உருவாகும் சூழல் நிலவுகிறது. அனைத்து வாகனங்களும் வேகமாக செல்வது நம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
தீர்வு:
ரத வீதிகளில் பொது போக்குவரத்தை தடை செய்வது மற்றும் பிரிக்கக்கூடிய வேகத்தடை நிறுவுவது எப்படி?
மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இதற்கான தரவுகளை கொடுத்து, அனைவரிடமும் கையொப்பம் பெற்று பேருந்து மற்றும் லாரிகளை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்து தரப்படும். தேசிய சுத்தமான திட்டம் (என்.சி.ஏ.பி) மூலம் இதற்கான நிதி பெறப்படும். ஏற்கனவே தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செயல் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நமது தெரு பிர்சசனையும் இணைத்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
எப்போது?
உங்கள் ஒத்துழைப்புடன் இரண்டு வருடத்திற்குள் (2024) என அவரது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவரது அறிக்கையை படித்த பலரும் பாராட்டி வருகின்றனர். வெற்றி பெறுவதற்கு வாக்களிப்போம் எனவும் கூறியுள்ளனர்.
Source: Bjp
Image Courtesy: India Tv