பெட்ரோல் குண்டு வீச்சு: பா.ஜ.க. அலுவலகத்தை பார்வையிட்ட மேலிட பார்வையாளர்!

Update: 2022-02-10 11:32 GMT

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 9) நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் சுவர் மற்றும் தரையில் பெட்ரோல் வெடித்து சிதறியதில் தீப்பொறி பற்றி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக அலுவலகத்திற்கு முக்கிய நிர்வாகிகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் உணவு வழங்க துறை அமைச்சர் சாய் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனிருந்தார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் உணவு வழங்க துறை அமைச்சர் சாய் சரவணன், எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி பாஜக துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரத்தினவேலு ஆகியோர் சென்னை பாஜக அலுவலகம் கமலாலயத்தில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை, அறிந்து பாஜக அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு, புதுச்சேரி பாஜக சார்பாக தைரியத்தையும், ஆதரவையும் அளித்தனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News