செல்லும் இடமெல்லாம் வாக்குறுதி பற்றி கேட்கும் பெண்கள் - திணறி ஓட்டம் பிடிக்கும் உதயநிதி

Update: 2022-02-11 10:00 GMT

லேட்டாக பிரச்சாரத்திற்கு வந்த உதயநிதி பெண்கள் தி.மு.க'வன் வாக்குறுதிகள் பற்றி கேள்வி எழுப்ப கடுப்பாகி பாதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பியதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.


தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என பெண்கள் கேள்விகளை கேட்க பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு உதயநிதி திரும்பினார்.


தஞ்சாவூர் கண்ணு குளம் மற்றும் கீழவாசல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி. காலை 8 மணிக்கு பிரச்சாரம் துவங்கும் என நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது, அதனாலேயே முன்னரே பெண்களும் கட்சியினரையும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் உதயநிதி வருவது தாமதமாகிக் கொண்டே சென்றதால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்களும் மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்களும் அவதிக்குள்ளாகினர். காலை 8 மணிக்கு வரவேண்டிய உதயநிதி தாமதமாக காலை 10:35 மணிக்கு வந்தார் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் தாமதமாக.


அங்கு வந்தவர் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் 'நான் நகை கடன் வாங்கியிருந்தேன் எனக்கு தள்ளுபடி ஆகலை?' என்று உதயநிதியிடம் நேரடியாகவே கேட்டவே உடனே அந்தப் பெண்ணிடம் சமாளிக்கும் விதமாக பதில் கூறிய உதயநிதி பேச்சை மாற்றும் விதமாக பேசினார். பின்னர் பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு இடைவெளியில் மேலும் ஒரு ஒரு பெண் உதயநிதியிடம் 'பிள்ளைகளை வளர்க்க உதவி' கேட்க மீண்டும் அப்செட் ஆனார் உதயநிதி. இப்படி தொடர்ந்து பெண்கள் உதயநிதியிடம் வாக்குறுதிகள் என்னவாயிற்று என கேட்கும் பொழுது பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற தி.மு.க'வினருக்கு சிரமமாக இருந்தது இதனால் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு உதயநிதி கிளம்பிவிட்டார்.


Source - Junior Vikatan

Similar News