"நாங்கள் கவர்னர் திட்டிகிட்டேதான் இருப்போம்" - துரைமுருகனின் ஆணவப் பேச்சு

Update: 2022-02-11 09:45 GMT

'தினமும் நாங்கள் கவர்னரை திட்டுவோம்' என தி.மு.க'வின் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, "தி.மு.க ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டன இதனால் நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை" என்றார்.


மேலும் பேசிய அவர், "நீட் தேர்வு குறித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் கொடுத்தார்கள் 234 எம்.எல்.ஏ'க்கள் முகத்தில் அடித்தாற்போல் அதைத் திருப்பி அனுப்பினார், இதனால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மீண்டும் கவர்னருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பியுள்ளோம் அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என இருந்துவிடலாம் இல்லை என்றால் தினமும் கவர்னரை திட்டியபடியே இருப்போம்" என பேசியுள்ளார் துரைமுருகன்.


தமிழக அரசின் மாண்புமிகு கவர்னரை தங்கள் அரசியல் லாபத்திற்காக நாங்கள் திட்டியபடியே இருப்போம் என ஆளும் தி.மு.க கட்சியின் அமைச்சரே சொல்வது சர்ச்சையை உருவாகியுள்ளது.



Similar News