காங்கிரஸ் கட்சியை போல் ஒரு குடும்பத்திற்காக இல்லை - மாநிலங்களவையில் சீறிய நிர்மலா

Update: 2022-02-11 09:45 GMT

"அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை இல்லாவிட்டால் அனைத்தையும் ஒரு குடும்பத்திற்காக உருவாக்கிய காங்கிரஸ் கட்சியை போல் 65 ஆண்டுகளில் விழுந்து விடுவோம்" என மாநிலங்களவையில் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார்.


கடந்த வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் இன்று மாநிலங்களவையில் அதற்கான விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "2022-23 ஆண்டு பட்ஜெட் என்பது தொலைநோக்கு பார்வை கொண்ட 100 வது சுதந்திர தினத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்லும் பட்ஜெட்டாக இருக்கும், இந்த பட்ஜெட்டின் நோக்கமே நிலையான மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும் அதன் மூலம் வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்தை சாமானிய மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் இருக்கும்" எனவும் தெரிவித்தார்.


எங்களின் பட்ஜெட் என்பது அடுத்த 25 ஆண்டுகளை நோக்கி அதற்காக உருவாக்கப்பட்டது எனவும், 'அடுத்த 25 ஆண்டுகால பார்வை இல்லாவிட்டால் நாங்களும் காங்கிரஸ் கட்சியை போன்று 65 ஆண்டுகளில் அனைத்தையுமே ஒரு குடும்பத்திற்காக சேவை செய்த கட்சியை போல் ஆகி விடுவோம்' என்றார்.

ஆனாலும் நாம் தொடர்ந்து பணவீக்கத்தை 6.2 சதவீதம் அளவிலேயே பராமரித்து கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம், ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 9.1 சதவீதம் வரை பணவீக்கம் இருந்தது என்பதை மறந்து விட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Source - Asianet NEWS

Similar News