உண்மை தெரியாமல் உளராதீங்க ஸ்டாலின் - குட்டு வைத்த மேற்கு வங்க ஆளுநர்

Update: 2022-02-13 13:15 GMT

உண்மையை உறுதி செய்து கொள்ளாமல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவதூறு பரப்பிய கருத்துக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.


அரசியலமைப்பு சட்டத்தின் 174'வது பிரிவை பயன்படுத்தி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் நடந்துகொண்டிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரை பிப்ரவரி 12'ம் தேதி முதல் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் அறிவித்தார், இதற்கு பல்வேறு இடதுசாரி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எது நடந்தாலும் வழக்கம்போல் தன் பங்குக்கு கருத்து கூறும் ஸ்டாலின் இந்த விவகாரத்தையும் தான்தோன்றித்தனமாக கருத்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பதிவில் "ஒரு மாநிலத்தின் தலைவராக உள்ள ஆளுநர் அந்த மாநிலத்திற்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மேற்கு வங்க ஆளுநர் இன்செயல் விதிமுறைகள் மற்றும் மரபுக்கு எதிரானது" எனவும் கருத்து தெரிவித்தார்.


இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார் "உண்மையை ஆராயாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் கடுமையானதாகவும், மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவை ஒத்தி வைத்ததாக" மேற்கு வங்க ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்


உண்மை எது என புரியாமலேயே எதிர்க்கிறேன் என்ற பெயரில் தான் தோன்றித்தனமாக கருத்து கூற வரும் ஸ்டாலினுக்கு இது அரசியல் அரங்கில் அசிங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Source - WEST BENGAL GOVERNOR TWEET

Similar News