சிறுமி தற்கொலை வழக்கு - சி.பி.ஐ விவகாரத்தில் முட்டுக்கட்டை போட நினைத்த தி.மு.க'வுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
தஞ்சையை சேர்ந்த சிறுமி தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட தி.மு.க'விற்கு நீதிமன்றம் தலையில் குடடு வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி லாவண்யா என்பவர் கடந்த மாதம் மதமாற்றம் கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார், இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க களம் கண்டு சிறுமி இழப்பிற்கு நியாயம் வேண்டும் என போராடி சி.பி.ஐ உத்தரவு வேண்டும் என கேட்டு வெற்றி பெற்றது. ஆனால் ஆரம்பம் முதலே இந்த வழக்கில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் நாடியது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்பொழுது வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி மற்றும் வில்சன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின்போது மாநில காவல் தறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் 'விசாரணையை சி.பி.ஐ'க்கு மாற்றுவதற்கு அரசின் ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை' என கூறினார்மேலும் சி.பி.ஐ இடமாற்றம் விவகாரத்தில் நாங்கள் தலையிட வில்லை நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்' என நீதிபதிகள் கூறினர்.
மேலும் இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே மதமாற்றத்தை மறுத்து வருகிறது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு, தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ'க்கு மாறுவதையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்கில் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவிற்கு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.