எம்.பி ஜோதிமணி வாக்கு கேட்டு சென்ற இடத்தில் சுயேட்சைக்கு வாக்கு கேட்ட தி.மு.க'வினர் - ஆத்திரத்தில் ஜோதிமணி

Update: 2022-02-14 12:45 GMT

கரூரில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் சுயேச்சையாக நின்று வாக்கு கேட்கும் நிகழ்வை நேரில் பார்த்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


கரூர் மாநகராட்சி 12 வது வார்டில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றார், அப்பொழுது தி.மு.க ஆதரவுடன் செயல்படுவதாக ஒரு வேட்பாளர் தென்னைமர சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கும்பலாக கூடி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பேச்சுவார்த்தையின்போது கரூர் எம்.பி ஜோதிமணியை வெளியேற்றிய தி.மு.க'வினர் மீது மிகுந்த கோபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரு தரப்பும் எதிரெதிர் அணியாக ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இதனால் அங்கே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு ஜோதிமணி அந்த இடத்தை விட்டு உடனடியாக வேறு பகுதிக்கு வாக்குகள் சேகரிக்க சென்றார்.


Source - Junior Vikatan

Similar News