மகேஷ்பாபுவின் சாதனையை தட்டி தூக்கிய விஜய் - வரலாறு படைத்த 'அரபிக்குத்து'
மகேஷ்பாபுவின் பாடல் புரிந்த சாதனையை விஜயின் பாடல் தட்டி தூக்கியுள்ளது.
நேற்று முன்தினம் மகேஷ்பாபுவின் தெலுங்கு படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிக்கலான 'கலாவதி' பாடல் வெளியானது, வெளியான 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்கள் 8 லட்சம் லைக்குகளை என 'சர்க்காரு வாரி பாட்டா' குழு அடித்து ஆட ஆரம்பித்தது.
இந்த மாபெரும் சாதனையை வேறு யார் முறியடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியான விஜயின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிலான 'அரபிக்குத்து' அடித்துதூக்கியது, வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகள் 2 மில்லியன் லைக்குகள் என வாரி குவித்துள்ள 'அரபிக்குத்து' தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடதக்கது.