இந்த விளம்பரம் தேவையா? - தி.மு.க'விற்கு பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு விளக்கம் கேட்டு தூதரகம் நோட்டீஸ்
கோவையில் தி.மு.க'விற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ருமானியா நாட்டைச் சேர்ந்தவருக்கு ருமானியா நாட்டின் தூதரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வகைகளில் தங்கள் பிரச்சார உத்திகளை பயன்படுத்தி வாக்காளர்களை கவர முயற்சிக்கின்றனர்.
ஆளும் தி.மு.க அரசு பல இடங்களில் ஹாட்பாக்ஸ், கொலுசு போன்றவற்றை வாக்காளர்களுக்கு பரிசாக கொடுத்து வாக்கு சேகரிக்க முயன்ற போது காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் கையும் களவுமாக மாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவையில் அயல்நாட்டவர் ஒருவர் தி.மு.க'வுக்காக பிரச்சாரம் செய்து பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது, மேலும் அதனை தி.மு.க'வின் ஐடி விங்க் பார்த்தீர்களா எங்களுக்காக அயல்நாட்டவரே வந்து பிரச்சாரம் செய்கிறார் அந்த அளவிற்கு கடல் கடந்து உள்ளது தி.மு.க'வின் புகழ்" என தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.
அப்படி தம்பட்டம் அடித்த தி.மு.க'வினருக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்துள்ளது. ஆம் கோவையில் தி.மு.க'வுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு நபர் ருமானியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார், அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வீடியோ அந்நாட்டு தூதரகம் வரை சென்றுள்ளது இந்நிலையில் ருமானியா தூதரகத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது அவர் மேலும் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் அதில் கூறப்பட்டுள்ளது.
யாருடைய பேச்சையோ கேட்டு தேவையின்றி தி.மு.க'விற்கு பிரச்சாரம் செய்த அந்த வெளிநாட்டு நபர் தற்போது தூதரகத்திடம் மாட்டிக் கொண்டது பரபரப்பாகியுள்ளது.