தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சியினர் அளிக்கின்ற உணவை சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தேர்தல் பணியில ஈடுபடுபவர்களுக்கு 34 அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போலீசார் அனைவரும் லத்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடியில் தேவையின்றி யாரையும் அனுமதிக்கக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவதற்கு தடை. வாக்கு செலுத்துபவர்கள் செல்போனை ஆப் செய்திருக்க வேண்டும்.
மேலும், இலவசமாக கட்சியினர் வழங்கும் உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது. வாக்குச்சாவடிக்குள் ஒரு கட்சிக்கு ஒரு முகவர் மட்டுமே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar