'அஸ்லாம் பாஷாவை' பெரியதாகவும் கோகுலகிருஷ்ணன் பெயரை சிறியதாக எழுதிய தேர்தல் ஆணையம்!

Update: 2022-02-19 09:53 GMT

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே போன்று பல இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் பெயரை சிறியதாக எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கோவை மாநகராட்சி 99 வார்டில் பாஜக சார்பாக கோகுலகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். அவரது பெயரை மிகவும் சிறிய எழுத்தில் வாக்களார்களுக்கு தெரியாத வகையில் அங்குள்ள தேர்தல் அலுவலர்கள் எழுதியுள்ளனர்.

மற்ற வேட்பாளர்களின் பெயர்கள் பெரியதாக அமைந்துள்ளது. குறிப்பாக திமுக சார்பில் போட்டியிடும் அஸ்லாம் பாஷா என்பவரின் பெயர் பெரியதாக அமைந்துள்ளது. அதே போன்று பாஜக தவிர்த்து பிற வேட்பாளர்களின் பெயர்களும் பெரியதாக எழுதப்பட்டுள்ளது. மேலும், பாஜக வேட்பாளர் என்பதற்கு பாரதீய என்ற வன்மத்துடனும் பெயர் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான தேர்தல் அலுவலர்களுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News