'இந்தத் தேர்தலில் தமிழகத்தில் முத்திரை பதிக்கப் போகிறது பா.ஜ.க' - பொன்.ராதாகிருஷ்ணன்
'இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய முத்திரை பதித்த வரலாறு பேசும்' என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மக்களை நம்பி தனித்து நிற்கிறது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் பா.ஜ.க'வுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழகத்தில் உள்ள நிர்வாகிகளிடம் இன்று காலை 5 மணி முதல் பேசி வருகிறேன் எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள் இந்த தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய முத்திரை பதித்ததாக வரலாறு அமையும்" என்றார்.
மேலும் அவர் பேசும்பொழுது, "தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சி பா.ஜ.க'வுக்கு ஏற்பட்டுள்ளது மறைமுக தேர்தல் எப்படி நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும் இதில் யார் யாருடன் போவார்கள் என தெரியாது கன்னியாகுமரி மாவட்டமே அதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க'வும், அ.தி.மு.க'வும் சேர்ந்து வெற்றி பெற்றதும் உண்டு தலைவர் தேர்தல் குதிரைபேரம் நடப்பதாக சொல்கிறீர்கள் ஆனால் இங்கு வாக்காளர்களே குதிரையாக்கிவிட்டார்கள்' என்றார்.