துணை ஆட்சியரை மிரட்டி அனுப்பிய தி.மு.க. வேட்பாளர்!

ஈரோட்டில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு யோசனை கூறிவந்த திமுக வேட்பாளரை வெளியே செல்லும்படி கூறிய துணை ஆட்சியரை மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-20 12:41 GMT

ஈரோட்டில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு யோசனை கூறிவந்த திமுக வேட்பாளரை வெளியே செல்லும்படி கூறிய துணை ஆட்சியரை மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. அதே போன்று ஈரோடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 41வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு திமுக வேட்பாளராக தண்டபாணி போட்டியிடுகிறார். இவர் தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவர் சிவகுமாரின் தம்பி ஆவார். இதனால் சற்று அதிகாரிகளை கூடுதலாக மிரட்டத்துவங்கி வந்தார்.

வாக்குப்பதிவு துவங்கிய முதலில் இருந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் நின்று தன்னுடைய ஆதரவாளர்களை நிறுத்தி ஒவ்வொரு வாக்காளர்களை மிரட்டி அனுப்பி வந்தார். அந்த சமயத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் குமரன் பார்வையிட வந்திருந்தார். அப்போது வேட்பாளர் வாக்குச்சாவடியை பார்வையிட்டு செல்லலாம். வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை என கூறினார். மேலும், வேட்பாளராக இருந்தாலும் வாக்காளர்களிடம் பேசி அனுப்பி வைப்பது தவறு என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தண்டபாணி, நான் திமுகவின் வேட்பாளர் என்னை வாக்குச்சாவடியில் இருந்து வெளியே செல்வதற்கு சொல்கின்ற அதிகாரம் யாருக்குமே இல்லை என்று தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அவருடன் இருந்த மற்றவர்கள் அமைதியாக வெளியேறினர். பலமுறை துணை ஆட்சியர் கூறியும் தண்டபாணி அசராமல் அங்கேயே வாக்குவாத்தில் ஈடுப்பட்டிருந்தார். நீங்கள் எங்கே போனாலும் எதுவும் செய்ய முடியாது என்றார். இதனால் வேறு வழியின்றி துணை ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News