தமிழகத்தில் மீண்டும் மறுத்தேர்தல்? வழக்கு தொடர பா.ஜ.க. மேலிடம் முடிவு!

Update: 2022-02-21 05:59 GMT

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகள் பதிவாகியிருப்பதால் மீண்டும் மறு தேர்தலை நடத்தக்கோரி வழக்கு தொடருவதற்கு பாஜக மேலிட தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் சரியாக நடத்தி முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக தலைமை முன்வைத்துள்ளது. மேலும், பாஜக அதிகமாக வாக்கு வங்கி உள்ள வடசென்னையில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் திமுக நீக்கியுள்ளது. கடந்த எம்.பி. தேர்தலின்போது வாக்கு அளித்தவர்கள் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் பெயர் பட்டியல் விடுப்பட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், வாக்களிக்க முடியாதவர்களிடம் நேரடியாக பாஜகவினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதே போன்று மதுரை மாநகராட்சியில் 6 வார்டுகளில் திமுகவினர் அத்துமீறல் செய்துள்ளனர். இதனால் அந்த மாநகராட்சியிலும் மறுத்தேர்தலை நடத்த பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட தலைவர் சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார். அதே போன்று கோவையிலும் திமுகவினர் தில்லு, முல்லு செய்திருக்கின்றனர் என கூறப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடருவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News