கடுமையான உழைப்பின் முதல் கட்ட பலனே தமிழக தேர்தல் முடிவுகள்!

Update: 2022-02-23 04:18 GMT

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அது மட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது.

ஆனால் தனித்து போட்டியிட்ட பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் பேரூராட்சி தலைவர் பதவியையும் பிடித்துள்ளது. அதே போன்று சென்னை மாநகராட்சியிலும் கால் பதித்து பாஜக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் முதல் கட்ட பலன் இந்த தேர்தலின் முடிவில் காணக்கிடைக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழக பாஜகவுக்கு என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News