கைக்குழந்தையுடன் பிரச்சாரம் செய்த பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி!

Update: 2022-02-23 12:34 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதன் முறையாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்ட விஜிதா தனது கைக்குழந்தையுடன் பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதன் முறையாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, அதிமுக தனித்து களம் கண்டது. திமுக 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.

ஆனால் பாஜக வேட்பாளர் விஜிதா தனது கைக்குழந்தையுடன் 21வது வார்டில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பொதுமக்களிடம் சென்றபோதும் தனது குழந்தையை கூடவே எடுத்து சென்றுள்ளார். இதனால் பெண்கள் வாக்குகளை வெகுவாக கவர்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதன்படி தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் விஜிதா 1,183 வாக்குகளை பெற்று அபாரமாக வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்து.

இந்நிலையில், கைக்குழந்தையுடன் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளரை சால்வை அணிவித்து அக்கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் கவுரவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் விஜிதா மற்றும் அவரது குழந்தையுடன் இருக்கின்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News