உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக பாதுகாக்கிறது: விஷம பிரச்சாரங்களை நிறுத்துங்கள்!

Update: 2022-02-25 07:15 GMT

உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை பாதுகாக்கின்ற வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளின் உதவியுடன் இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சுயநல ஊடகங்கள் சில வன்மத்துடன் தகவல்களை வெளியிடுகிறது. இதன் மூலம் இந்தியாவில் சில பிரச்சனையை உண்டு செய்வதற்கான வேலைகளில் சிலர் மறைமுகமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக செய்தித்தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கருத்துகளை சுயநலமிக்க சில விஷமிகள் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 15ம் தேதி, உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பணியில் இல்லாத அனைத்து தொடர்ந்து இந்திய அரசு உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு சிலர், குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு நடக்கும் ஆயுத தாக்குதல்களை விட நம் நாட்டில் உள்ள ஒரு சில விஷமிகளின் அரசியல் விமர்சனங்கள் அவர்களின் வக்கிர எண்ணத்தை, சுயநல அரசியலை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: 

Tags:    

Similar News