"மதச்சார்பற்றது எனக் கூறிக்கொள்ளும் அரசு அனைத்து மத கோவில்களையும் சமமாக நடத்த வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Update: 2022-02-26 13:15 GMT

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தியாவில் உள்ள கோவில்களின் பெருமையை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலை நிர்வகிக்கும் அதிகாரிகளின் முறைகேடு மற்றும் அலட்சியத்தை குறித்து கோவில்களின் அவல நிலை குறித்து கேள்வி எழுப்பிய பக்தர் ரங்கராஜன் நரசிம்மன் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் ரத்து செய்தது.


அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தொடர்பான பொருத்தமான கேள்விகளை எழுப்பிய ஜி.ஆர்.சுவாமிநாதன் 'ஏன் கோவில்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்' என கேள்வி எழுப்பினார். மேலும் இந்தியாவில் உள்ள கோவில்களின் பெருமையையும் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


மனுதாரர் நரசிம்மன் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் தவறான நிர்வாகத்தையும் சுட்டிக்காட்டினார் மற்றும் சமூக ஊடகங்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் ஆகியோரின் பல தவறுகளை அம்பலப்படுத்தினார். அப்பொழுது குற்றச்சாட்டுக்களை மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகம் மற்றும் அதன் அறங்காவலர்கள் அவதூறு செய்ததாக நரசிம்மன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மதச்சார்பற்ற எனக் கூறிக்கொள்ளும் அரசு அனைத்து மத நிறுவனங்களையும் சமமாக நடத்த வேண்டும்" எனக்கூறினார். மேலும் "டி.ஆர்.ரமேஷ் போன்ற அறிவும்,அர்ப்பணிப்பும் உள்ள ஆர்வலர்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே அளவு அக்கறையை கோவில்கள் மீதும் பயன்படுத்த வேண்டும் என்று வாதிடுவது தவறில்லை" என்றார்.


"தமிழ்நாடு கோவில்களின் தேசம், கோவில்கள் நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன, இருப்பினும் கோவில்களின் தற்போதைய நிலை விரும்பத்தக்கதாக இல்லை அவற்றின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் தனியார் நபர்களால் அளிக்கப்பட்டுள்ளன. பழங்கால சிலைகள் திருடப்பட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன கோவில் பணியாளர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோவில்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு வேளை கூட பூஜை நடைபெற வில்லை அப்படிப்பட்ட கோயிலின் பெருமையை மீட்டெடுக்க நிறைய செய்ய வேண்டும்" என கூறினார்.


ஒரு நீதிபதியே தமிழ்நாட்டில் கோவில்கள் பராமரிக்கப்படும் அவலத்தை எடுத்துரைக்கும் போது அரசு இதை கவனிக்குமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Source - Opindia.com

Similar News